Monday, May 13, 2013

விஜய் படப்பிடிப்புக்கு விசிட் அடித்த அஜீத்!


விஜய் படப்பிடிப்புக்கு விசிட் அடித்த அஜீத்!

Ajith visit in Vijay shooting spotசமீபகாலமாக தமிழ்ப்படங்களின் படப்பிடிப்புகள் தமிழ்நாட்டை தவிர மற்ற எல்லா நாடுகளிலும் நடந்து வருகிறது. பெருவாரியான படப்பிடிப்புகள் அமெரிக்கா, ஆஸ்திரேயா போன்ற அயல் நாடுகளில் நடந்தாலும், சில படப்பிடிப்புகள் மும்பையில் நடந்து வருகிறது. அந்த வகையில், துப்பாக்கி படத்தையடுத்து விஜய் நடித்து வரும் தலைவா படப்பிடிப்பும் மும்பையில்தான் அதிக நாட்கள் நடந்தது. அந்த சமயத்தில் அஜீத்தின் வலை படப்பிடிப்பும் அதே மும்பையில் நடந்து வந்தது.

இந்த நிலையில், தனது படப்பிடிப்பு நடைபெற்ற பகுதியில் இருந்து சிறிது தூரத்தில் விஜய் நடிக்கும் தலைவா படப்பிடிப்பு நடைபெறுவதை கேள்விப்பட்ட அஜீத், திடீர் விசிட் செய்திருக்கிறார். அஜீத்தின் வருகையைப்பார்த்து விஜய் உள்பட அனைவருமே இன்ப அதிர்ச்சியடைந்தார்களாம்.

அதைத் தொடர்ந்து, விஜய்யிடம் வெகுநேரமாக பேசிக்கொண்டிருந்த அஜீத், தலைவா படத்தில் விஜய் பாடிய ஒரு பாடலையும் கேட்டாராம். கேட்டு முடித்ததும், இப்பாடல் இந்த ஆண்டின் சூப்பர் ஹிட் பாடல் வரிசையில் கண்டிப்பாக இடம்பிடிக்கும் என்று சொல்லி, விஜய்யை சந்தோசப்படுத்தி விட்டு அங்கிருந்து விடைபெற்றாராம் அஜீத்.

No comments: