Sunday, November 6, 2011

VELAYUDHAM ROCKS

வேலாயுதம் திரை விமர்சனம்

தயாரிப்பு: ஆஸ்கார் பிலிம்ஸ் பி லிமிடட் சார்பாக, வ். ரவிச்சந்திரன்
இயக்கம்: M.ராஜா.
இளைய தளபதி விஜய் ஹன்சிகா மோத்வாணி, ஜெனீலியா மற்றும் சரண்யா மோகன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இதற்கு இசையமைத்தவர் விஜய் ஆண்டனி. பிரியன் ஒளிப்பதிவு செய்ய, எடிட்டிங் செய்துள்ளார் V.T.விஜயன்.
விஜயின் நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு திரைக்கு வந்த வேலயுதம் சொல்லி அடித்த வெற்றி விஜயின் வெற்றிக்கு வித்தான திரைப்படம் வழக்கமான கதையம்சமாக இருந்தாலும் அரைத்த விதத்தில் வித்தியாசம் காட்டியுள்ளார் இயக்குனர் ராஜா.ராஜாவும் விஜய் ரசிகராக இருந்துதான் சினிமாவுக்கு வந்தாரோ என்னமோ ரசிகர்களின் விருந்துக்கு ருசியளித்து விட்டாளும் விஜயை அழகான திரைகதயம்சத்தொடு நடிக்க வைக்க தவறிவிட்டார்.இது விஜயின் மசால கலந்த ஒரே பார்முலாவை ஒத்த திரைப்படம் என்பதை மறுக்க முடியாது:

கிராமத்தில் குறும்புக்கார பால்காரன் விஜய். தங்கை சரண்யா மோகனுக்காக ஊரையே அதகளம் பண்ணுபவர். தங்கை திருமணத்துக்கு சென்னை பைனான்ஸ் கம்பெனியில் பணம் போட்டு வைத்திருக்கிறார். அதை எடுத்து, திருமணப் பொருட்கள் வாங்க பரிவாரங்களுடன் சென்னை வருகிறார். வந்த இடத்தில் வேலாயுதம் என்ற ஹீரோவை ஊரே கொண்டாடிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தின் அமைதியை குலைக்க, சர்வதேச பயங்கரவாத கும்பல் திட்டமிடுகிறது. அதற்கு தமிழக அமைச்சரையே பயன்படுத்துகிறது. அவர், சென்னையில் பல இடங்களில் குண்டு வைக்கிறார். இவரது திட்டத்தை முறியடிக்க வேலாயுதம் என்ற ஹீரோ வருகிறார். யார் இந்த வேலாயுதம் என்று வில்லன் கோஷ்டி திணறுகிறது. மக்கள் ‘வேலாயுதமே துணை’ என்று தங்கள் ஹீரோவை கொண்டாடுகிறார்கள். பால்காரன் வேலாயுதத்துக்கும் காட்பாதர் வேலாயுதத்துக்கும் என்ன சம்பந்தம் என்பது ஆக்ஷன் திரைக்கதை.
தங்கை, மோதிரம் விழுந்துவிட்டது என்பதற்காக, கிணற்றில் தங்கம் இருப்பதாகச் சொல்லி ஊரையே தண்ணீர் இறைக்க வைப்பது, தங்கை வளர்க்கும் கோழியை பிடிக்க, ஊரையே புரட்டிப்போடுவது, தியேட்டரில் தங்கைக்கு பிடித்த ‘பாசமலர்’ பட காட்சியை திரும்ப திரும்ப போடச்சொல்லி வெறுப்பேற்றுவது என்று விஜய் அடிக்கும் கூத்துகள் வில்லேஜ் காமெடி. சென்னை வந்த பிறகு ஆக்ஷன் அதிரடி. தங்கையின் முருக்குப் பையை சந்தானம் திருடிவிட்டு ஓட, அவரைப் பிடிக்க விஜய் பைக்கை எடுத்துக் கொண்டு துரத்த, அதில் வெடிகுண்டு இருந்து வெடிப்பதும், ஜவுளிக் கடையில் வில்லன் கோஷ்டி சூட்கேசில் வெடிகுண்டு வைக்க, அதை எடுத்து வில்லன் இருக்கும் இடத்திலேயே விஜய் கொண்டு கொடுத்துவிட்டு வருவதுமாக, வில்லேஜ் வேலாயுதம் காட்பாதராக மாற்றப்படும் திரைக்கதை சுவாரஸ்யம். திருடனாக அறிமுகமாகி விஜயிடம் இருக்கும் பைனான்ஸ் பணத்தை திருட, அவருக்கு நண்பனாகும் சந்தானத்தின் லொள்ளுகள் படத்தின் கலகல ஏரியாவை திருடிக் கொள்கிறது.

ஜெனிலியா மரணத்தின் தருவாயிலும் தன் சமூக கடமையைச் செய்யும் பொறுப்புள்ள மீடியாகாரர். தான் உருவாக்கிய வேலாயுதம், விஸ்வரூபம் எடுத்து நிற்பதைக் கண்டு ஆச்சர்யப்படுவது, மக்களை காப்பாற்றும் ஒவ்வொரு தருணத்திலும் தன்னை மறந்து விஜய் மீது காதல் கொள்வது, அவர் தன் மாமன் மகள் ஹன்சிகாவை விரும்புவதை அறிந்து சின்ன ஏமாற்றமாக கலங்குவது என பக்குவமாக நடித்திருக்கிறார். இவருக்கு நேர் எதிர் ஹன்சிகா. மாமா மாமா என்று விஜய்யை சுற்றி சுற்றி வருவதிலும், ஜெனிலியாவைக் கண்டு பொறுமுவதிலும் கொஞ்சமாக நடிக்கிறார். அவ்வப்போது முந்தானையை விலகவிட்டு ரசிகர்களை கிறங்க வைக்கவும் செய்கிறார். கொலைவெறியோடு வரும் அபிமன்யூ சிங் ஹீரோ கையில் அடிபட்டு சாகிறார். சரண்யா மோகன் வழக்கமான தங்கை என்றாலும் அழகில் ஜொலிக்கிறார். பாம் வெடித்து உயிர்விடும் காட்சியில் நம்மையும் கலங்க வைக்கிறார்.

சண்டை மற்றும் பாடல் காட்சிகளில் பிரமாண்டம். விஜய் ஆண்டனியின் பின்னணி இசை வேலாயுதத்தை படத்தின் பலம். ப்ரியனின் கேமரா கிராமத்தில் அழகாகவும், நகரத்தில் ஆக்ரோஷமாகவும் பணியாற்றி இருக்கிறது.

விஜயின் அரசியல் சாயம் பூசப்பட்டு இருக்கிறது நிறைய காட்சிகளில் ,
விஜய்: அழகான நடனம், சன்டை காட்சிகள், தங்கை பாசம் என்று வழமையாகவே வெளிக்காட்டி நடித்துள்ளார்:
ஜெனிலியா: பத்திரிகையாளராக வந்தாலும் ஓட்டைகள் ஒட்டப்படவில்லை
இயக்குனர்: கமர்சியல்

விஜயை வைத்து மீண்டும் மீண்டும் இவ்வாறான கதையில் நடிக்க வைத்து பணம் சம்பாதிக்கும் இயக்குனர்களே, விஜய் நடித்திருக்கும் இறுதி படமாக இந்த வேலாயுதம் இருக்க வேண்டும்.விஜய்க்கு அழகான திரை கதையமைத்து கமர்சியல் கிங் கொடுப்பதே விஜயின் எதிர்கால சினிமாவுக்கு நன்று.அறிவுஜீவிகள், விமர்சர்கள் இவர்களிடத்தில் இருக்கும் விஜய் மீதான் விமர்சன்ம் தொற்கடிக்கபட வேன்டும் ஆகவே விஜயின் அற்புதமான நடிப்பை அழகான கதையோடு அமைக்கவும்.

விஜயின் வெற்றி திரைப்படங்களில் வேலாயுத்ம் ஒர் மைக்கல்.

விமர்சன குழுவினர்: S.SATHISH KUMAR  K.KARTHIKEYAN

No comments: