கமல் பிறந்தநாள் எனக்கு மினி தீபாவளி: விஜய்
digg |
துப்பாக்கி
படத்தின் ரிலீசுக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால், முதல் பட ரிலீசுக்கு
காத்திருக்கும் ஹீரோ போன்று ஆர்வமும் பதற்றமுமாக இருக்கிறார் விஜய்.
இது குறித்து கூறிய விஜய்,"10 வருடங்களுக்கு முன்பு வரை ஹிட் கொடுப்பது
பெரிய விஷயம் அல்ல. இன்றோ நிலைமை தலை கீழாகி விட்டது. ஒவ்வொரு படத்துக்கும்
அதிக உழைப்பைக் கொட்டணும். கடைசி நிமிடம் வரை உயிரைக் கொடுக்கணும். அதனால
தான் ரிசல்டை நினைக்கும் போது பயமாவும் இருக்கு, த்ரில்லிங்காவும் இருக்கு"
என்றார்.
விஜய்க்கு சினிமாவில் நண்பர்கள் கிடையாது என்று பலரும் கூறுவார்கள். இது குறித்து கூறிய விஜய்,"இது அபாண்டமான வதந்தி. எல்லார் கூடயும் நல்ல உறவோடு தான் இருக்கேன். ஆனா வெளிய காட்டிக்கிறதில்ல. கடந்த 3 வருசமா கமல் சாரோட பிறந்தநாளுக்கு மறக்காம ஆஜர் ஆகிடுவேன். இந்த வருடமும் அவரோட பிறந்தநாள் எனக்கு மினி தீபாவளிதான்" என்றார்.முன்னணி ஹீரோக்கள் சிலரின் படங்கள் ப்ளாப் ஆகி விட புதுமுகங்களின் படங்கள் ஜெயித்து விட்டன. இது குறித்துக் கூறிய விஜய்,"தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை கதை தான் ஹீரோ. அதை புரிஞ்சி நடந்தா எல்லா படமும் ஹிட் தான்" என்றார்.
விஜய் மட்டும் அல்லாமல் அவரது மகன் சஞ்சய் குறித்த செய்திகளையும் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்கின்றனர். தனது வாரிசு குறித்துக் கூறிய விஜய்,"சஞ்சய் இப்போது ஏழாவது படித்துக் கொண்டிருக்கிறான். அவனுக்கு கிரிக்கெட் மேல காதல்னு சொல்லலாம். அந்த அளவுக்கு கிரிக்கெட் பைத்தியமா இருக்கான். எந்த மேட்ச் நடந்தாலும் டிவி முன்னாடி உக்காந்துக்கிறான். கிரிக்கெட் பயிற்சியும் எடுத்துக்கிட்டு இருக்கான். சேப்பாக்கமா கோடம்பாக்கமான்னு தெரியவில்லை" என்று சிரித்துக் கொண்டே கூறுகிறார்.

No comments:
Post a Comment