துப்பாக்கி வசூல் விவரம்
Thursday 15th of November 2012
ஏ ஆர் முருகதாஸ்-விஜய் கூட்டணியில் வெளிவந்திருக்கும் துப்பாக்கி படம் ரசிகர்களிடம் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளதுடன் வசூலிலும் சாதனை புரிந்து கொண்டிருக்கிறது. அடுத்த கில்லி என்று ரசிகர்கள் கொண்டாடும் அளவுக்கு துப்பாக்கி திரைக்கதையை செதுக்கி இருக்கிறார் முருகதாஸ். அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளதால், துப்பாக்கியின் வசூலும் பிரமிக்க வைக்கிறது.
திரையுலக ஜாம்பவான்கள் பலரும் துப்பாக்கி படத்தை பாராட்டிக் கொண்டிருக்கின்றனர். இந்தப் படத்தை இரண்டு தடவை பார்த்தேன். அந்த அளவுக்கு நன்றாக இருக்கிறது என்று முருகதாசுக்கு போன் போட்டு பாராட்டி இருக்கிறார் ரஜினி. தமிழ்நாடு மட்டும் அல்லாமல் கேரளாவிலும் கணிசமான ரசிகர்கள் விஜய்க்கு உண்டு. இதனால் மற்ற தமிழ் படங்களின் வசூல் சாதனையை கேரளாவிலும் முறியடித்திருக்கிறது துப்பாக்கி.
துப்பாக்கி வெளிவந்து இன்றுடன் மூன்று நாட்கள் ஆகின்றன. முதலிரண்டு நாட்களுக்கான வசூல் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
முதல் நாள் (13/11/2012)- 11.3 கோடி
இரண்டாம் நாள் (14/11/2012)-13.64 கோடி
ஆக மொத்தம் இரண்டு நாட்களில் 24.68 கோடியை வசூல் செய்துள்ளது.













































